Articles
தொழில் முனைதல்

நம் நாடு சுதந்திரம் அடைந்த பின் பல துறைகளில் வளர்ச்சி கண்டுள்ளது. ஆனால் தொழில் துறையில் பெண்கள் போதிய அளவு வளர்ச்சி அடையவில்லை. நம் நாட்டின் மொத்த உற்பத்தியில் 45% ஏற்றுமதி ஆகிறது. அதில் 40% சிறு தொழிலின் பங்கு உள்ளது.

ஆனாலும் மேலும் கீழுமாக நான்கு பற்கள் முளைத்ததைக் கண்டு மகிழ்ச்சி அடையும் ஓர் தாய் மீதி 28 பற்களும் ஒழுங்காக எவ்வித பாதிப்பும் இன்றி வர வேண்டும், நிலைத்து நிற்க வேண்டும் என்ற கவலையோடு தானே இருப்பாள். அதே போல் தான் சிறு தொழிலின் வளர்ச்சியும்.

உங்களில் பலர் ‘இன்று இவ்வளவு நேரம் வீணாக கழிந்து விட்டதே’ என்று நினைப்பர். இன்னும் சிலர் பக்கத்து வீட்டில் உள்ளவர்களிடம் உட்கார்ந்து பேசி பேசி நேரத்தை வீணாக கழிப்பதை விட ஏதாவது செய்யலாமே! என்று நினைத்திருப்பீர்! ஆனால் செயல்படுத்துவது எப்படி என்று யோசித்து கொண்டு இருப்பீர்!

நம்மில் பலர், ஏன் எல்லோரும் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்கள் தான்! ஆனால் எத்தனை பேர் அதற்கான முயற்ச்சியில் இறங்கி இருக்கின்றீர்கள்? சிந்தியுங்கள்.

நமது நாட்டின் முதுகெலும்பு விவசாயம். ஆனாலும் சிறு தொழில்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. சிறு தொழிலின் வளர்ச்சியை மனதிற் கொண்டு நம் அரசு அவ்வப்போது ஊக்கம் அளிக்கும் வகையில் பல திட்டங்களை அறிவிக்கிறது. நீங்கள் அவற்றை பயன்படுத்தலாமே!

ஒரு சிறு தொழில் முனைவோர் தன் தொழிலில் வெற்றி பெறவேண்டுமானால் மிக கடினமாக உழைக்க வேண்டும். எவன் ஒருவன் தான் ஏற்றுக்கொண்ட கடமையிலேயே கரைந்து விடுகிறானோ அவன் தான் வெற்றி பெற முடியும்! அவன் தான் சிறந்த தொழில் முனைவோர்!

நான் ஏற்றுக் கொள்ள போகிற கடமை எது? என்று உங்களில் பலர் சிந்தித்துக் கொண்டு இருக்கின்றீர்கள்.

அது எவ்வகையான தொழில்?

உங்களில்,

சிலர் வீட்டிலிருந்தே செய்ய விரும்பலாம்

சிலர் அலுவலகம் அமைக்க விரும்பலாம்.

எதுவானாலும் நீங்கள் நினைவில் கொள்ள வேண்டியது என்ன வென்றால் ஆரம்பத்தில் சில மாதங்கள் லாபம் ஈட்ட இயலாமலேயே கூட போகலாம்.

ஆரம்பத்தில் அகல கால் வைக்க வேண்டாம்.

தொழில் ஒன்றை தொடங்க வேண்டும் என்று நீங்கள் முடிவெடுத்த நிமிடத்தில் இருந்து உங்கள் தொழில் வரவு செலவுகளை முறைப்படி எழுதி வையுங்கள்.

உங்கள் போட்டியாளர் எவ்வகையான பொருட்களை வழங்குகிறார்கள் என்பதனை கவனியுங்கள். உங்கள் வாடிக்கையாளர்களை வரையறைப் படுத்திக் கொள்ளுங்கள்.

துவக்கத்தில் உறவினர் மற்றும் நண்பர்கள் மூலம் விற்பனையே அடிப்படை என்று உணர்ந்து செயல் பட வேண்டும். நீங்கள் தொழில் தொடங்க விரும்பும் பகுதியினை தேர்ந்தெடுங்கள்.

நீங்கள் சுயமாக தொழில் தொடங்க நினைத்தால் முறையான தொழில் திட்டம் மிகவும் அவசியம்.

முயற்சி அடுத்த உடனேயே செல்வத்தை கொண்டு வந்து கொட்டாது.

ஆனால்

செல்வத்தை குவிக்கும் வாய்ப்புகளை பெருக்கும்.

அந்த வாய்ப்புகளை பயன்படுத்துவது உங்கள் கையில் தான் உள்ளது.

ஆக,

மலர்களை நாடிச் செல்லும் வண்டுகளைப் போல் நாமும் வாய்ப்புகளை தேடி செல்வோம்.

“நாளை” சூரியன் உதிக்கப்போகிறது. அதனால் இன்று சூரியன் மறைவதற்குள் நீங்கள் செய்ய நினைக்கும் சாதனைகளை செய்து விடுங்கள்.

“இன்று” என்பது ஓர் இனிய தேர். அத் தேரில் முழுமையாகவும் மகிழ்ச்சியுடனும் பயணம் செய்ய பழகி கொள்ளுங்கள்.

“நேற்று” எங்கோ சென்றுவிட்டது. அதனை நினைத்து உங்கள் நிகழ் காலத்தை வீணடிக்க கூடாது.

ஆதலால் செய்வதை சிறப்பாக செய்

செய்வதை உடனே செய்

செய்வதை செம்மையாக செய் என்ற மொழியினை வழிகாட்டியாக கொண்டு

இலட்சியம் என்பது

எட்டிப் பறித்திடும் முல்லையும் அல்ல

எறிப்பறித்திடும் தேங்காயும் அல்ல

போராட்டம்! போராட்டம்!!

எறிமலையின் மீது வெற்றிக் கோடி நாட்டல்.

என்பதனை ஒவ்வொருவரும் நினைவில் கொள்ள வேண்டும்.

Fashion Entrepreneurship

Women empowerment in India

Entrepreneurship

Formation Of a Project Report

Stores Management

Industrial Revolution

Production Management

Modernization of traditional enterprises

Entrepreneurship Development for Women

How to eradicate Poverty?

Women as Enterpreneurs

How to Select a Project

Entrepreneurship is the back bone of development

Marketing